Monday, August 24, 2026
HuisTechnologyநானோ (Nano) தொழிநுட்பம் ஒரு பார்வை..!

நானோ (Nano) தொழிநுட்பம் ஒரு பார்வை..!

நானோ தொழிநுட்பத்துக்கான (மீநுண் தொழில்நுட்பம்) எண்ணக்கரு 1959 இல் பௌதிகவியலாளரான ரிச்சட் பீய்ன்மனால் (Richard Feynman) அவரது There’s Plenty of Room at the Bottom எனும் கட்டுரையின் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதில் அவர் அணு அளவில் மாற்றம் நிகழ்வதை இயற்கை தடை செய்யவில்லை என்றும் இதனால் எதிர்காலத்தில் ஓர் புதிய விஞ்ஞான மாற்றம் நிகழவுள்ளது என்றும் நிறுவினார். அதுவே நானோவின் தொடக்கப் புள்ளி எனலாம். நானோ தொழில்நுட்பம் எனும் சொல்லை முதலில் 1974 இல் நோரியோ தானிகுச்சி (Norio Taniguchi) அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

நானோ தொழில்நுட்பம் எனப்படுவது 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டு, அச்சிறு அளவாக அமையும் பொழுது சிறப்பாக வெளிப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும், அப்பொருட் பண்புகளைப் பயன்படுத்தும் நுட்பியலும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது.

ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில், 10−9) ஒருபங்கு. இதன் மூலம் ஒரு கருவி அல்லது பொருளின் வடிவம், தொகுப்பு, பண்பு போன்றவற்றை உள்ளடக்கிய மிகச்சிறிய அமைப்பைக் கொண்ட தொழில்நுட்பம். அதாவது ஒரு பாரிய கருவியின் பயன்பாட்டை, அக்கருவியின் சிறிய உருவத்தின் மூலம் மிக எளிதாகவும், துல்லியமாகவும் செய்வது எனக் கொள்ளலாம்.

நானோ தொழில்நுட்பத்தின் பல்வேறு பயன்பாடுகள் இன்று இத் தொழிநுட்பம் பௌதிகவியல், இரசாயனவியல், உயிரியல், மருத்தவம் மட்டுமன்றி அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தினை செலுத்தும் ஒரு துறையாக மாறியுள்ளது.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் அதீத திறன்மிக்க கம்ப்யூட்டர்களை உருவாக்க முடியும். கருவிகளையும் உபகரணங்களையும் தற்போதைய எடையை விட 50 மடங்கு தொடக்கம் 1000 மடங்கு வரை பாரம் குறைந்த தயாரிக்க முடிவதுடன், தற்போதுள்ள வலிமையை விட பல மடங்கு வலிமை கொண்ட பொருட்களையும் தயாரிக்க முடியும். ஜெட் விமானங்கள், ஏவுகணைகள், கார்கள் உட்பட அனைத்தையும், மிகவும் உறுதியானதாக, எடை குறைவாக, மிகக் குறைந்த செலவில் தயாரிக்க முடியும்.

தற்போது அதிக வெப்பத்தினை தாங்க கூடிய, தீயில் எரியாத என பல வகை புதிய உலோகங்கள் இத்தொழினுட்பத்’தின் மூலம் கண்டு பிடிக்கப்படுகின்றன.

அத்துடன்அறுவைசிகிச்சை உபகரணங்கள், ரத்தக்குழாய் அடைப்பைச் சரி செய்கூடிய சிறிய ரோபோக்கள், போன்றவற்றுடன் இன்னும் பல புதிய அதிசிறப்பு வாய்ந்த மருத்தவ சாதனங்களுக்கும் இத் தொழினுட்பம் வழிவகுத்தள்ளது. செயல்படுத்த வேண்டுமோ அதைத் துல்லியமாகத் தேர்வு செய்து, தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும். அதிகபட்ச பயன்பாடு, மிகக்குறைந்த பக்கவிளைவு என்பதே இதன் நோக்கம்.

நானோ தொழில்நுட்பத்தின் அபாயம்

மனித குல மேம்பாட்டுக்கு இத்தொழில்நுட்பம் உதவிகரமானதாக இருந்தாலும், இதன் அபாயமான மறுபக்கத்தையும் மறுக்க இயலாது. ஆக்கத்துக்குப் பயன்படுத்துவதைப் போலவே, இதன் மூலம் மலிவான, அபாயகரமான ஆயுதங்களையும் தயாரிக்க முடியும்.

அத்துடன் புதிய வகை மனிதனுக்கு தீங்க பயக்கக் கூடிய மருந்துக்கள் மற்றும் சாதனங்களையும் உருவாக்க முடியும்

இலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் மற்றும் நனோ விஞ்ஞான பூங்கா ஹோமாகம பிட்டிப்பன பிரதேசத்தில் 50 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: You are not allowed