வவுனியாவில் 2 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் செய்த குற்றங்கள் நிரூபிக்கப்படதை தொடர்ந்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று (21.08.2026) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வவுனியா, மெனிக்பாம் பகுதியில் இக் குற்றச்செயல் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்துள்ளன.
வழக்கு விசாரணையின் போது, எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
குறித்த வழக்கின் சாட்சியங்களை அரச சட்டவாதி சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


