பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக பரவி வரும் வதந்திகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே. இந்திகா குமாரி லியனகே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அத்துடன், நாளை (14) நடைபெறவுள்ள பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அவர் பரீட்சார்த்திகளுக்கு உறுதி அளித்துள்ளார்.

சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட லியனகே, வினாத்தாள்கள் அடங்கிய எந்தவொரு பாக்கெட்டும் திறக்கப்படவில்லை என்றும், பரீட்சை ஒருங்கிணைப்பு மையங்களுக்கு வெளியே எந்தவொரு பரீட்சைப் பொருட்களும் விநியோகிக்கப்படவோ அல்லது கொண்டு செல்லப்படவோ இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற தளங்களில் பரவி வரும் போலித் தகவல்களை நம்பி பரீட்சார்த்திகள் பீதியடையவோ அல்லது ஏமாறவோ வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன், அனைத்து பரீட்சார்த்திகளும் தமக்கு ஒதுக்கப்பட்ட கால அட்டவணையின்படி, குறித்த நேரத்திற்குள் அந்தந்த பரீட்சை மையங்களுக்குச் சென்று ஆஜராகுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.


