2025 ஆம்ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி உலகம் அழியப் போவதாக தெரிவித்த கானா நாட்டை தீர்க்கதரிசி என கூறிக் கொண்ட எபோ நோவா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதான குறித்த நபர் தன்னைத்தானே தீர்க்கத்தரிசி என்று கூறிக் கொள்கிறார். அவர் சாக்கு உடை அணிந்து கொண்டு மக்களுக்காக உண்ணாவிரதம், பிரார்த்தனை மேற்கொள்வதாக கூறிக் கொண்டு வரவிருக்கும் பேரழிவு குறித்து எச்சரிப்பதாக இணையத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார்.
உலக அழிவிலிருந்து மக்களை காப்பாற்ற கப்பல் கட்டுதல் அந்த காணொளியில், 2025 டிசம்பர் 25-ஆம் திகதி முதல் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் உலகம் அழியப் போகிறது.

உலகம் அழியும் போது மக்களைக் காப்பாற்ற கடவுளின் உத்தரவின் பேரில், பைபிளில் வருவது போல 8 பெரிய கப்பல்களை கட்டி வருவதாக கூறினார்.
இவரது பேச்சைக் கேட்ட மக்கள் அதை நம்பி, பேழைகளைக் கட்டுவதற்கு தங்கள் உடைமைகளை விற்று பணத்தை அவருக்குக் கொடுத்துள்ளனர். மேலும் அந்த பேழையில் இடம் பிடிக்க அவரை தேடிச் செல்லவும் தொடங்கினர்.
இந்த நிலையில் தான், தன்னை தீர்க்கத்தரிசி என்று கூறிய எபோ நபோ திடீரென தனது பேச்சை மாற்றிக்கொண்டார். அதாவது, அவர் கடவுளிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததால், அதனை ஏற்றுக் கொண்ட கடவுள் அழிவை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், டிசம்பர் 25-ம் திகதி உலகம் அழியப் போகிறது” என்று கூறி மக்களிடையே பீதியை ஏற்படுத்திய எபோ நோவா என்பவரை கானா நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
எபோ நோவா மழுப்பலாக காணொளி வெளியிட்ட நிலையில், அவரை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கூறி காவல்துறை கைது செய்தது.


