Saturday, February 28, 2026
HuisLocalஜனாதிபதி அனுரவை தகாத வார்த்தையால் திட்டிய ஐவர் கைது..!

ஜனாதிபதி அனுரவை தகாத வார்த்தையால் திட்டிய ஐவர் கைது..!

மத்தள அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த காணொளியை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய கடான பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் கடான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தச் சந்தர்ப்பத்தில் மத்தல அதிவேக வீதி நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய இரு அதிகாரிகளுக்கும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நிறைவேற்று ஜனாதிபதியை பகிரங்கமாகத் தகாத வார்த்தைகளால் திட்டி, அநாகரீகமாக நடந்து கொண்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமை காரணமாகவே அவர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (17) கதிர்காமம் புனித யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் ஆசனப்பட்டிகள் இல்லாமையினால், அதிவேக வீதிக்குள் நுழைய காவல் துறையினர் அனுமதி வழங்காத காரணத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

இதன்போது அந்தப் பேருந்தில் பயணித்தவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பெயரைக் கூறி, பேருந்தில் வந்தவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதுடன், அந்தச் சந்தர்ப்பத்தைக் கைபேசியில் காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: You are not allowed