பாடசாலைகளின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரிய பணி புரிந்து வருகின்ற பட்டதாரிகளது நிரந்தர ஆசிரியர் நியமனம் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த விடயத்தில் தற்போதைய அரசாங்கமும் பட்டதாரிகளுக்கு அநீதி இழைப்பதாக இலங்கை பட்டதாரிகள் சங்க தலைவர் கணேசன் அநீரன் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் ஒரு இணக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்வை தர இருந்த போதும் ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு தற்போதைய அரசாங்கம் பாடசாலையில் இணைக்கப்பட்டு ஆசிரியர் பணியை ஆற்றிக் கொண்டு வருகின்ற பட்டதாரிகளை நிரந்தர ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க பல விடையங்களை கூறிக் கொண்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை பரீட்சை ஒன்றின் மூலம் பிரச்சினையை தீர்க்க வழியிருந்தும் அதனை ஏற்கும் மனநிலையில் பட்டதாரிகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


