Tuesday, April 14, 2026
HuisLocalமல்லாவியில் போதகரால் சூறையாடப்பட்ட பெண்கள்; போதகரைக் காப்பாற்ற களத்தில் குதித்தவர்கள் யார்?

மல்லாவியில் போதகரால் சூறையாடப்பட்ட பெண்கள்; போதகரைக் காப்பாற்ற களத்தில் குதித்தவர்கள் யார்?

தென்னிந்திய திருச்சபை போதகர் டிக்சனால் சூறையாடப்பட்ட பெண்கள் மற்றும் பிணை எடுக்கச் சென்ற பாதகர்கள் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

கடந்த மாதம் மல்லாவி சிறுவர் அபிவிருத்தி திட்டத்தில் இடம்பெறும் தொடர்ச்சியான முறைகேடு தொடர்பாகவும் அதில் பணிபுரியும் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல் தொடர்பாக முறைப்படி ஒரு சுயாதீன திருச்சபையை சார்ந்த ஒரு போதகர் தென்னிந்திய திருச்சபை பேராயர் வேலுப்பிள்ளை பத்தயாளனுக்கு எழுத்து மூலமாக கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதம் கிடைக்கப் பெற்றதும் பேராயர் டிச்சனை அழைத்து குற்றச்சாட்டுக் கடிதம் தொடர்பாக ஆலோசனை செய்துள்ளார்.

இதன் பின்னர் மல்லாவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு சென்ற டிக்சன் பணியாளர்கள் அனைவரையும் மிரட்டி சுயாதீன திருச்சபையை சார்ந்த பணியாளர்கள் அனைவரையும் பணியில் இருந்து விலக்கப் போகிறேன். உண்மையை சொல்லுங்கள். யாருடைய பாஸ்டர் எனக்கு ஏதிராக கடிதம் அனுப்பியது என்று தொடர்ச்சியாக மிரட்டிய நிலையில் வேறு வழி இல்லாமல் போதகரை அடையாளம் காட்டிக் கொடுத்தனர்.

அதன் பின்னர் குறித்த பாஸ்டருடன் தொலைபேசியில் உரையாடிய டிக்சன் மன்னிப்பு கடிதம் தந்தால் தான் உங்களின் திருச்சபை பிள்ளைகள் இங்கு பணி செய்ய முடியும் எனவும் இல்லை என்றால் அவர்கள் எங்கும் வேலை செய்யாதவாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டல் தொடர்ந்து கொடுத்துள்ளார்.

வேறு வழி இல்லாமல் குறித்த பாஸ்டர் மல்லாவியில் உள்ள ஆலயத்துக்கு சென்று அனைத்து பணியாளர்கள் முன்னிலையிலும் மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்து சென்றுள்ளார். அதே சமயம் குறித்த பாஸ்டரின் திருச்சபையை சேர்ந்த திட்டத்தின் பணியாளர்களிடத்திலும் கடிதம் பெறப்பட்டு பேராயருக்கு தான் குற்றமற்றவர் என்று டிக்சன் நிரூபித்து உள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே மல்லாவி திட்டத்தில் பணிபுரியும் திருமணமான ஒரு குழந்தையின் தயாரோடு கள்ளத் தொடர்பில் இருந்து அவர் கர்ப்பமானதும் கழட்டி விட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் அவர் மீது இவரே ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தார். பின்னர் குறித்த பெண்ணின் கர்ப்பம் கலைக்கப்பட்ட பின்னர் பணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டார்.

தற்போது பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் மிகவும் பாதிக்கப்பட்ட பெண் எல்லோரிடமும் சகயமாக பழகக் கூடியவர். குறித்த பெண்ணிடம் டிக்சன் பல தடவை சில்மிஷம் செய்ய முற்பட்ட போதெல்லாம் அந்த பிள்ளை எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்துள்ளது.

சம்பவம் நடந்த தினம் அட்மின் பணியாளர்கள் மூவரும் இணைந்தே திட்டம் போட்டு இந்த பிள்ளைகளை மாட்டி விட்டுள்ளனர் என்று எமது செய்திப் பிரிவுக்கு மக்கள் புகார் செய்கின்றனர்.

அங்கு பணியாற்றும் கணனி இணைப்பாளருக்கு புதிய மோட்டார் சைக்கிள் எடுப்பதற்கு டிக்சன் முழுத்தொகைப் பணமும் செலுத்தி உள்ளார். அதற்கு வட்டி தினசரி வழங்கும் முத்தத்தில் கழிக்கப்பட்டு வந்திருக்கிறது.

இந்நிலையில் எப்போதும் டிக்சனை விட்டு பிரியாத கணக்காளர் சம்பவத்தின் போது எப்படி பிரிந்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கணனி இணைப்பாளர் குறித்த இரு பிள்ளைகளிடம் நாங்கள் மூவரும் காரில் போவோம் என சொல்லி காரில் ஏற்றிவிட்டு இறங்கிய சமயம் ஏற்கனவே சாரதி, முகாமையாளர் ஆகியோர் ஆயத்தமாக இருந்த வேளை, ஏற்கனவே மது போதையில் நின்ற டிக்சன் திடீரென காரில் ஏறியதும் கதவு சாத்தப்பட்டு லாக் செய்யப்பட்டது.

பின்னர் காருக்குள் பிள்ளைகள் இருவருக்கும் குளிர்பானத்திலோ அல்லது வைன் ஓ திட்டமிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. மயக்கம் அடைந்த நிலையில் இருந்த பிள்ளைகளில் ஒருவர் தான் இவர்களின் இலக்கு ஆகவே அவரை மூவரும் இணைந்து வேட்டையாடி உள்ளார்கள்.

பின்னர் குளத்தடிக்கு சென்று பாதிக்கப்பட்ட பிள்ளைகள் இருவரையும் மிகவும் சாதுரியமாக வீடுகளுக்கு கொண்டு சென்று விட்டுள்ளார்கள். அதிலும் ஒரு முக்கியமான விடயம் கணனி இணைப்பாளர் பிள்ளையை குளிக்க வையுங்கள் ஆளுக்கு சுகமாகிடும் என கூறி சென்றுள்ளார்.

நிறை வெறியில் இருந்த டிக்சன் அத்தனை பெண் பணியாளர்கள் முன்னிலையில் உள்ளாடையுடன் குளித்துள்ளார். உணவு உண்ட பின்னர் சில பணியாளர்கள் வீடு சென்றுள்ளனர்.

அனைவரும் வீடு திரும்பிய நிலையில் மாலை குறித்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மயக்கம் அடைந்த நிலையில் மற்றவர் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர், சாரதியாக சென்றவர் வீடு பொது மக்களால் முற்றுகை இடப்பட்ட விடயம் டிக்சனுக்கு ஒரு பணியாளர் மூலம் தெரிவிக்கப்பட்ட நிலையில் எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என கூறி தப்பித்து குடும்பமாக கிளிநொச்சி முறிப்பில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபையில் தஞ்சம் புகுந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பிள்ளைகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து தென்னிந்திய திருச்சபையின் போதகர்களான தாவீது, டானியல் மோகன் ஆகியோர் பேரம் பேச சென்றுள்ளனர். அதன் போது அங்கு நின்ற மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர், முறிப்பு திருச்சபையின் ஞாயிறு காலை வழிபாட்டினை டிக்சன், தாவீது இருவரும் இணைந்து நடத்தி உள்ளார்கள். வழிபாடு முடிந்ததும் டிக்சன் உடனடியாக ஆலய வளாகத்தை விட்டு வெளியேறி உள்ளார்.

இந்நிலையில் அவரது ஏனைய நண்பர்களான லிங்கேஸ்வரன், சதீஸ் டானியல், டானியல் மோகன் ஆகிய மத போதகர்கள் முறிப்பு தென்னிந்திய திருச்சபைக்கு சென்று தாவீது குடும்பத்துடன் இணைந்து தப்பிக்க வைக்கும் நோக்குடன் மந்திர ஆலோசனை செய்துள்ளனர். ஆனாலும் முயற்சி தோல்வி அடைய இரவு வேளை மல்லாவி பொலிஸ் நிலையத்தில் டிக்சனை ஒப்படைத்துள்ளனர்.

இப்படியிருக்க நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட டிக்சன் மற்றும் ஏனைய 2 குற்றவாளிகளையும் 22ம் திகதிவரை நீதிமன்ற காவலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: You are not allowed