Tuesday, August 25, 2026
HuisLocalபொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் பிணையில் விடுதலை..!

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் பிணையில் விடுதலை..!

கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கடுவெல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொலிஸ் மாஅதிபர் நடுவீதியில் கொலை செய்யப்படலாம் என கருத்து தெரிவித்தமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய அவர் கைதானார்.

கடந்த 03ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சாகர காரியவசம், பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சாகர காரியவசம் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவிற்கு இன்று(10) காலை அழைக்கப்பட்டிருந்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: You are not allowed