Wednesday, January 14, 2026
HuisBreakingதமிழர் பகுதி ஒன்றில் ஆட்டு இறைச்சியுடன் நாய் இறைச்சி கலப்பு; மக்களே அவதானம்..!

தமிழர் பகுதி ஒன்றில் ஆட்டு இறைச்சியுடன் நாய் இறைச்சி கலப்பு; மக்களே அவதானம்..!

நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படுவது தொடர்பாக பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக நாய்கள் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை மைதானத்தில் உள்ள பனை மரம் ஒன்றில் நாய் ஒன்று கொல்லப்பட்டுக் கட்டி தொங்க விடப்பட்டுள்ள நிலையில் உள்ளதுடன் மற்றுமொரு நாய் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

புது வருட பிறப்பையொட்டி ஏனைய இறைச்சி வகைகளுடன் கலப்பதற்காக இந்த நாய்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். மேலும், ரெஜிபோம் பெட்டிகள் உட்பட சந்தேகத்திற்கிடமான பொருட்களும் அவ்விடத்தில் காணப்பட்டுள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இடம் பெற்றுள்ளதுடன், ஆட்டு இறைச்சி போன்று நாய் இறைச்சி விற்பனை செய்த சம்பவங்கள் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: You are not allowed