Wednesday, January 14, 2026
HuisLocalபிரான்ஸில் காதலனுடன் சென்ற பெண்; அநாதரவான கணவனும் பிள்ளைகளும்..!

பிரான்ஸில் காதலனுடன் சென்ற பெண்; அநாதரவான கணவனும் பிள்ளைகளும்..!

பிரான்ஸில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் , கணவர் மற்றும் பிள்ளைகளையும் அநாதரவாக விட்டுவிட்டு பிறிதொரு நபருடன் சென்று வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியாவை பின்புலமாக கொண்ட குறித்த இளம் குடும்ப பெண் வெளிநாட்டவருடன் ஏற்பட்ட உறவால் குடும்பத்தை உதறிவிட்டு சென்றுள்ள நிலையில், கணவர் பிள்லைகளுடன் தவித்து வருவதாக கூறப்படுகின்றது.

வவுனியாவை பின்புலமாக கொண்ட குறித்த இளம் குடும்ப பெண்ணுக்கு பதின்ம வயது பெண் பிள்ளைகள் இருவர் இருப்பதாக தெரிய வருகின்றது.

இந்நிலையில் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்ற பெண் வெளிநாட்டவர் ஒருவருடன் வசித்து வருவதாகவும், இதன் காரணமாக கணவன் மன உளைச்சலில் உள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

2010 ஆம் ஆண்டில் இவர்களின் திருமணம் இலங்கையில் இடம்பெற்றதாகவும், அதன் பின்னரே பெண் பிரன்ஸிற்கு சென்றதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குடும்பத்தை விட்டு சென்ற மனைவியை பிள்ளைகளின் நலன் கருதி வருமாறு கணவன் கெஞ்சி கேட்ட போதும் பெண் அதற்கு சம்மதிக்கவில்லை என தெரிய வருகின்றது.

அதுமட்டுமல்லாது கணவ்ர் தன்னை அச்சுறுத்துவதாக பெண் வழங்கிய முறைபாட்டை அடுத்து , பொலிஸாரால் கணவன் எச்சரிக்கப்பட்டதாகவும் பிரான்ஸ் தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: You are not allowed