Tuesday, January 13, 2026
HuisWorldமார்க் கார்னி தலைமையிலான கனடா அரசில் அறிமுகமாகும் புதிய வர்த்தக சட்டங்கள்..!

மார்க் கார்னி தலைமையிலான கனடா அரசில் அறிமுகமாகும் புதிய வர்த்தக சட்டங்கள்..!

கனடா பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசின் 2025ஆம் ஆண்டின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்த மாகாணங்களுக்கு இடையிலான வர்த்தக தடைகளை நீக்கும் முயற்சி, தற்போது சட்டபூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில், Bill C-5 எனப்படும் சட்டத்தின் கீழ், இதற்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்தச் சட்டம், 2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன் மூலம், மாகாணங்களில் நடைமுறையில் உள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விதிமுறைகள், அதே போல் தொழிலாளர்களின் உரிமங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவை, மத்திய அரசின் அளவிலும் அங்கீகரிக்கப்படும்.

“இது நாடு முழுவதும் இரட்டைப் பணிகள் மற்றும் நிர்வாக தடைகளை அகற்றுகிறது. இதன் மூலம் கனடிய தொழிலாளர்கள், தொழில்கள் மற்றும் நுகர்வோருக்கான பொருளாதாரம் மேலும் வலுப்பெறும்,” என நவம்பர் மாத அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தில் உணவு மற்றும் மதுபானங்கள் (மது, பீர், வைன்) உள்ளிட்ட சில முக்கிய பொருட்களுக்கு விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

குறியீடாக ஆண்டை தொடங்க இது ஒரு நல்ல முயற்சி. ஆனால் உண்மையான தாக்கத்தைப் பார்க்க வேண்டுமென்றால், மத்திய அரசை விட மாகாண அரசுகளிடமிருந்து அதிக நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறோம் என கனடிய சுயாதீன தொழில்கள் கூட்டமைப்பின் (CFIB) சட்ட விவகாரங்களுக்கான துணைத் தலைவர் ரையன் மலஃப் என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: You are not allowed