Tuesday, January 13, 2026
HuisWorldபிரான்ஸில் புத்தாண்டு கொண்டாங்களில் வன்முறை; தீக்கிரையான 1,173 வாகனங்கள்..!

பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாங்களில் வன்முறை; தீக்கிரையான 1,173 வாகனங்கள்..!

பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாங்களில் 1,173 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையான 984-ஐ விட அதிகமாகும்.

புத்தாண்டு கொண்டாங்களில் 505 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் 403 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் இந்த சம்பவங்கள் நடந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனினும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நகர்ப் புறங்களில் நிலைமை அதிகமாக அமைதியாக இருந்ததாகவும், வன்முறை சம்பவங்கள் குறைவாக பதிவானதாகவும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களும் கடந்த ஆண்டை விட குறைந்ததாக குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை சில பகுதிகளில், குறிப்பாக ஸ்ட்ராஸ்பேர்க் மற்றும் முல்ஹூஸ் நகரங்களின் சில குடியிருப்பு பகுதிகளில், சூழ்நிலை சற்று கடினமாக இருந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: You are not allowed