Wednesday, January 14, 2026
HuisLocalதையிட்டி விகாராதிபதிக்கு எதிரான போராட்டம்; பிரதேச சபையினருக்கு அழைப்பானை..!

தையிட்டி விகாராதிபதிக்கு எதிரான போராட்டம்; பிரதேச சபையினருக்கு அழைப்பானை..!

யாழ்.தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பலாலி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின்படி நீதிமன்ற பதிவாளரால் அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஐந்தாம் திகதி பிரதேச சபை உறுப்பினர்கள் 11 பேரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் திகதி தையிட்டி விகாரையின் முன்பாக விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட 29 பேருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தீர்மானத்திற்கமைய தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை முன்பாக சட்டவிரோத கட்டிடம் என பெயர் பலகை நாட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பிரதேச சபை செயலாளருக்கு பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இநிநலையில் இந்த விடயம் தொடர்பாக நேற்று வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வில் விவாதிக்கப்பட்டது.

அதன்படி, தனியார் காணிக்குள் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் என்ற வகையில் எமது பிரதேச சபையின் சட்ட ஆலோசகரின் ஆலோசனைப்படி பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை தையிட்டி விகாரையை உடைக்கப்போவதாக நாடாளுமன்டற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தவறான தகவல்களை சிங்கள ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதாக சபை அமர்வில் குற்றஞ்சாட்டப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: You are not allowed