Wednesday, January 14, 2026
HuisLocalபாடசாலை நேரம் 30 நிமிடங்கள் அதிகரிப்பு; வெளியாகிய புதிய அறிவிப்பு ..!

பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் அதிகரிப்பு; வெளியாகிய புதிய அறிவிப்பு ..!

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணங்க, 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணையைத் திருத்துதல் மற்றும் கல்விசார் ஊழியர்களை (ஆசிரியர்களை) பயன்படுத்துதல் தொடர்பான புதிய வழி காட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் பாடசாலை நிறைவடையும் நேரத்தை பி.ப. 2.00 மணி வரை நீடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும், தற்போது நிலவும் இயற்கை அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2026 ஆம் ஆண்டிலும் பாடசாலை நேரம் காலை 7.30 முதல் பி.ப. 1.30 வரை தற்போதுள்ளவாறே தொடரும்.

முக்கிய திகதிகள்:

தரம் 1 மற்றும் தரம் 6 தவிர மற்றைய அனைத்துத் தரங்கள்:

2026 ஆம் ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணை ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பமாகும்.

தரம் 6: கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகும்.

தரம் 1: கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகும்.

புதிய சீர்திருத்தங்களின் கீழ் பாடப்பரப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக, 2026 ஆம் ஆண்டின் முதலாம் தவணைப் பரீட்சையை நடத்தாமல், அந்த நேரத்தைக் கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: You are not allowed