யாழ் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விஹாரைக்குரிய காணிப்பரப்பை, நயினாதீவு – நாக விஹாரைக்கு கையளித்தால், தையிட்டியில் ஏற்கனவே உள்ள சட்டரீதியான திஸ்ஸ விஹாரைக்குரிய காணியை, பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வழங்க முடியும் என்று, நயினாதீவு நாக விஹாரையின் விஹாராதிபதி தெரிவித்துள்ளார்.
நயினாதீவு – நாக விஹாரையின் விஹாராதிபதி இன்று, தையிட்டியில் உள்ள சட்ட ரீதியான திஸ்ஸ விஹாரைக்குரிய காணிக்கு சென்ற போதே இந்த தீர்வை அறிவித்துள்ளார்.

இதன்படி, சட்டவிரோதமாக தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விஹாரையின் காணிப்பரப்பு, நயினாதீவு – நாக விஹாரைக்கு பொறுப்பளிக்கப்பட வேண்டும்.
இதனையடுத்து சட்டவிரோத திஸ்ஸ விஹாரை அமைந்திருக்க கூடிய காணியின் அளவுக்கு சமமான காணியை, நயினாதீவு – நாக விஹாரைக்குச் சொந்தமான தையிட்டியில் அமைந்துள்ள சட்ட ரீதியான திஸ்ஸ விஹாரையின் காணியிலிருந்து, பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு வழங்க முடியும் என்றும் விஹாராதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது, விஹாராதிபதியின் கருத்தை, சட்டவிரோத திஸ்ஸ விஹாரை அமைப்பு காரணமாக காணிகளை இழந்த, காணி உரிமையாளர்கள் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


