பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ.34.19 மில்லியன் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 35 வயது இந்தியர் என தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் பேங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 403 இல் மூலம் காலை 11.00 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாக தெரிய வருகிறது.
சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைக்காக காவல்துறை போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


