Tuesday, January 13, 2026
HuisLocalகடல் சீரின்மைக்கு மத்தியிலும் இலங்கைக்குள் ஊடுருவிய இந்திய மீனவப் படகுகள்..!

கடல் சீரின்மைக்கு மத்தியிலும் இலங்கைக்குள் ஊடுருவிய இந்திய மீனவப் படகுகள்..!

கடல் சீற்றம் காரணமாக கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைமடி படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு உள்ளிட்ட கரையோரங்களில் உள்ள கடற்பகுதியில் சீரற்ற காலநிலையால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதன் காரணமாக கடற்றொழிலாளர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

இதை சாதகமாக பயன்படுத்திய இந்திய இழுவை மடி கடற்றொழிலாளர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு ஒரு கிலோமீற்றர் கரைக்கு அண்ணளவாக வருகை தந்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான கடல் வளம் அவர்களின் கண்முன்னே சட்டவிரோதமான முறையில் அழித்துச் செல்லப் படுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

முல்லைத்தீவு, வட்டுவாகல் மற்றும் சாலை பகுதியில் இலங்கை கடற்படையின் மிகப்பெரிய கடற்படை தளங்கள் அமைந்திருக்கின்ற போதிலும் கடற்படை தளத்திற்கு அண்மையாக வந்து இந்திய இழுவைமடி படகுகள் எந்தவித பயமுமின்றி தொழில் செய்து வருகின்றன.

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இந்திய கடற்றொழிலாளர்கள் அழித்துச் செல்வதை தடுப்பதற்கு இதுவரை எந்தவித முயற்சிகளையும் உரியவர்கள் எடுக்கவில்லையென கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: You are not allowed