Tuesday, January 13, 2026
HuisLocalதிடீர் சோதனையால் அம்பலமாகிய கமக்கார அமைப்பின் நிதி முறைகேடுகள்..!

திடீர் சோதனையால் அம்பலமாகிய கமக்கார அமைப்பின் நிதி முறைகேடுகள்..!

கிளிநொச்சி – இரணைமடு கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனம் மற்றும் கிளிநொச்சி கமநல சேவையத்தின் கீழ் உள்ள மகிழங்காடு கமக்கார அமைப்பு ஆகியவற்றின் நிதி முறைகேடுகள் தொடர்பில் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

தேசிய கணக்காய்வு திணைக்கள அதிகாரிகளால் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்த நிலையில் குறித்த விவகாரம் வெளிபடுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் உள்ள விவசாயிகளிடமிருந்து கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப் பகுதிகளில் அறவிட்டப்பட்ட பெருந் தொகையான நிதியானது உரிய கணக்கு முறைகள் பயன்படாமலும் வங்கிகளில் வைப்பிலிடப்படாமலும் கூட்டத் தீர்மானங்கள் இன்றியும் தான் தோன்றித்தனமாக நிதி செலவிடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தினால் முறைகேடான முறையில் மகிழங்காடு கமக்கார அமைப்பின் ஊடாக மானிய உரம் பெற்றுக் கொள்ளப்பட்டமை உரத்திற்கான நிதிகளை பெற்றுக் கொண்டமை தொடர்பிலும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் விவசாயிகளால் முன்வைக்கப்பட்டன.

அதனையடுத்து, நேற்றைய தினம் (08.01.2026) கிளிநொச்சிக்கு வருகைத்தந்த தேசிய கணக்காய்வு திணைக்கள அதிகாரிகளால் இரத்தினபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் வைத்து ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிதி முறைகேடுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு இரணைமடுக் குளத்தின் திட்ட முகமைத்துவ அலுவலகத்தில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த பற்றுச்சீட்டு புத்தகங்கள் மற்றும் சில ஆவணங்களையும் அதன் பிரதிநிதிகளையும் பெற்றுச் சென்றுள்ளனர்.

அத்துடன் உர விநியோகம் தொடர்பிலான முறைகேடுகள் இடம்பெற்றமை தொடர்பாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தில் இருந்த ஆவணங்களையும் மகிழங்காடு கமக்கார அமைப்பில் இருந்த ஆவணங்களையும் மேலதிக விசாரணைகளுக்காக கொண்டு சென்றுள்ளனர்.

நேற்று பகல் 10 மணி முதல் பிற்பகல் மாலை 5. 15 மணி வரை குறித்த விசாரணை கிளிநொச்சி இரத்தினபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்மேளத்தின் காசோலைகள் வங்கி கணக்கு புத்தகம் என்பவற்றை அதன் பொருளாளர்கையளிக்காமலும் விசாரணைகளுக்கு சமூகமளிக்காமலும் இருந்துள்ளது.

இவ்வாறு விவசாய அமைப்புகள் தொடர்பிலும் கமநல சேவை நிலையத்திலும் தேசிய கணக்காய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் முதலாவது விசாரணை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: You are not allowed