Thursday, April 16, 2026
HuisLocalநீரில் மூழ்கி மாணவன் பரிதாபமாக பலி; திருகோணமலையில் துயரம்..!

நீரில் மூழ்கி மாணவன் பரிதாபமாக பலி; திருகோணமலையில் துயரம்..!

கால்வாய் ஒன்றில் நீராடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். குறித்த துயர சம்பவம் கந்தளாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் இடம்பெற்றுள்ளது

இவ்வாறு உயிரிழந்தவர் பேராதுவெலிய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என தெரிய வந்துள்ளது.

குறித்த சிறுவன் தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து அந்த இடத்தில் நீராடிக் கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது.

விபத்தையடுத்து பிரதேசவாசிகளும் இளைஞர்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், அவர் நீராடச் சென்ற இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இவர் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்த மாணவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக கந்தளாய் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: You are not allowed