இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பான்டா பகுதியில், புத்தாண்டு தினத்தன்று தன்னை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்த முயன்ற அயலவரை, 18 வயது யுவதி ஒருவர் தற்காப்புக்காக கோடாரியால் தாக்கி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனியாக இருந்த வேளையில், மதுபோதையில் இருந்த 45 வயதுடைய பொதுமகன் ஒருவர் குறித்த பெண்ணிடம் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
இதன் போது அவர் அந்த யுவதியிடம் அத்துமீறி நடந்து கொண்ட போது, தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் அந்த அங்கிருந்த கோடாரியால் அவரைத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தின் பின்னர், குறித்த பெண் தானாகவே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி சரணடைந்துள்ளார்.
தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றியதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த பெண்ணை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


